You are here

மின்சார கார் பகிர்வு தொடக்கம்

பல ஆண்டு காலம் திட்டமிட்டு, பற்பல தாமதங்களுக்குப் பிறகு, பொது கார் பகிர்வுத் திட்டத்திற் கான மின்சார வாகனங்கள் டிசம்பர் 12ம் தேதி முதல் சாலைகளில் ஓடவிருக்கின்றன. தொடக்கமாக, மொத்தம் 80 வாகனங்கள் பகிர்வுக்குக் கிடைக்கும் என இச்சேவையை வழங்கும் ‘புளூஎஸ்ஜி’ நிறுவனம் தெரிவித்தது. இரு வகையான சந்தா திட்டங்கள் நடப்பிலிருக்கும் என அந்நிறுவனம் நேற்று அறிவித்தது. அவற்றில் ஒன்றான வருடாந்திர தவணைக் கட்டண உறுப்பினர் திட்டத்திற்கு மாதத்திற்கு $15 கட்டணம் விதிக்கப்படும். மற்றொரு திட்டமான வாராந்தர உறுப்பினர் திட்டத்திற்குத் தொடர் கட்டணம் எதுவும் கிடையாது. ஆர்வம் உள்ளவர்கள் www. bluesg.com.sg இணையத் தளத்தில் பதிவு செய்துகொள் ளலாம். டிசம்பர் 11ஆம் தேதிக்குள் சந்தா திட்டத்தை உறுதிப்படுத்தும் முதல் ஆயிரம் பேருக்கு சிறப்புச் சலுகைகள் கிடைக்கும்.

முதல் கட்டமாக 80 மின்சார கார்கள் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் கார் பகிர்வு திட்டத்தின்கீழ் செயல்பாட்டைத் தொடங்கவுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்