You are here

பணிப்பெண்ணை மீட்ட நால்வர் படை

புக்கிட் பாஞ்சாங் அக்கம்பக்க போலிஸ் மையத்தைச் சேர்ந்த நான்கு போலிஸ் அதிகாரிகள் புதன்கிழமை காலை நேரத்தில் ஒரு புளோக்கின் ஐந்தாவது மாடி யின் முகப்பு கைப்பிடிச்சுவரில் லிருந்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றினர். மியன்மாரை சேர்ந்த 24 வயது பணிப்பெண்ணைக் காப்பாற்றிய அதி காரிகள் குழுவுக்கு ஸ்டாஃப் சார்ஜண்ட் ஸ்டான்லி கோ, 28, தலைமை தாங்கினார். அந்தக் குழுவில் இடம்பெற்ற நால்வரில் ஒருவரான 19 வயது ஸ்பெஷல் கான்ஸ்டபிள் கார்பரல் ராஜ்தேவ் சிங், அந்த தேசிய சேவைப் பணியில் சேர்ந்து ஒன் றரை மாதங்கள்தான் ஆகியிருந் தன. சார்ஜண்ட் பிரேம் ரெங்கசாமி, 28, ஸ்டாஃப் சார்ஜண்ட் சான் வாய் ஹோங், 28, ஆகியோர் இதர இருவர்.

ஒரு மாதின் உதவியுடன் இந்த நால்வரும் அந்தப் பணிப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். “அந்தப் பெண்ணை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்பதே அப்போது என்னுடைய ஒரே சிந்த னையாக இருந்தது,” என்று சார்ஜண்ட் ரங்கசாமி கூறினார். பணிப்பெண் மீட்கப்பட்டதற்குப் பிறகு அவர் அந்தப் பெண்ணிடம் தமிழ்மொழியில் பேசினார். தமிழ் மொழி அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருந்தது.

புக்கிட் பாஞ்சாங் ரோட்டில் இம்மாதம் 6ஆம் தேதி மியன்மார் பணிப்பெண்ணை மீட்ட அதிகாரிகள் இடமிருந்து சார்ஜண்ட் பிரேம் ரெங்கசாமி, ஸ்டாஃப் சார்ஜண்ட் சான் வாய் ஹோங், ஸ்டாஃப் சார்ஜண்ட் ஸ்டான்லி கோ, ஸ்பெஷல் கான்ஸ்டபிள் கார்பரல் ராஜ்தேவ் சிங் ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்