You are here

அமைச்சர்: ஸ்கில்ஸ்ஃபியூச்சரில் மொழி, தகவல்தொடர்பு, உன்னத சேவை கற்கலாம்

  • கோப்புப்படம்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தில் சேர்ந்து எந்த தேர்ச்சியைப் பெறலாம் என்பது தெரியாதவர்கள் அந்தத் திட்டத்தில் சேர்ந்து மொழி களை, தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தை, உன்னத சேவை தேர்ச்சியைக் கற்கலாம் என்று கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரி வித்து இருக்கிறார். இந்த மூன்று துறைகளை சிங்கப்பூரர்கள் தேர்ந்தெடுத்தால் அது தவறாகப் போய்விடக்கூடிய வாய்ப்பு இல்லை என்று அவர் கூறினார். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் தொடர்பில் பொதுமக்களை எட்டுவதற்காக ஒரு புதிய இயக் கம் நேற்று உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தில் தொடங்கப்பட்டது. அதில் உரையாற்றிய அமைச்சர், தான்கூட ஒரு மொழியை இப் போது கற்று வருவதாகக் குறிப்பிட் டார். திரு ஓங், கடந்த ஓராண்டாக மலாய் மொழியைக் கற்று வருவ தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி வித்தது.

ஸ்கில்ஸ் ஃபியூச்சர் ஆதரவுடன் கூடிய ஓர் ஆயுள் கல்வி விழா 2017 அக்டோபர் மாதம் 28ஆம் தேதி நடந்தது. அதில் மனித இயந்திர பயிலரங்கு நடத்தப்பட்டது. கோப்புப்படம்