You are here

மின்சார கார் பகிர்வுத் திட்டம் அதிகாரபூர்வமாக தொடக்கம்

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முதல் பெரிய அளவிலான கார் பகிர்வுத் திட்டம் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. மொத்தம் 80 வாகனங்களுடன் 120 மின் இணைப்புகளைக் கொண்ட 32 மின்னேற்ற நிலையங்களும் நேற்று பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. எதிர்வரும் 2020ம் ஆண்டுக் குள் கார்பன் வெளியேற்றம் முற்றி லும் இல்லாத இத்தகைய 1,000 மின்சார வாகனங்களுடன் 2,000 மின் இணைப்புகளையும் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண் டுவரும் திட்டத்தின் முதல் கட்டம் இது. இதன்வழி, உலகிலேயே இரண்டாவது பெரிய மின்சார கார் பகிர்வுத் திட்டம் சிங்கப்பூரில் நடப்பிலிருக்கும். நிலப்போக்குவரத்து ஆணை யம், பொருளியல் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட் டத்தை போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் சிங்கப்பூர் ராட்டி னத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது நேற்றுத் தொடங்கி வைத் தார்.

திட்டத்தின் தொடக்கவிழாவில் மின்சார காரை அட்டையைக் கொண்டு திறக்கும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்