You are here

மீண்டும் வந்தார் பிரியங்கா

  • பிரியங்கா

மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கி உள்ளார் பிரியங்கா. ‘வெயில்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இவர். அப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் பிரியங்காவை சில தமிழ்ப் படங்களில் காண முடிந்தது. பெரிதாக ஒரு வெற்றிவலம் வருவார் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், கோடம்பாக்கத்தில் இருந்து காணாமல் போனார். அதன் பிறகு மலையாளப் படங்களில் மட்டுமே பிரியங்காவின் கவனம் இருந்தது. நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்று பிரியங்கா கூறியதாக அவ்வப்போது தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகும். ஆனால் அவர்தான் வந்தபாடில்லை.

இந்நிலையில் ‘தீயோர்க்கு அஞ்சேல்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தில் மறுபிரவேசம் செய்துள்ளார் பிரியங்கா. தமிழ்த் திரையுலகம் சிறப்பாக வளர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ளார். “நான் கேரளாவில் பிறந்தாலும் என்னை நடிகை ஆக்கியது தமிழ்ச் சினிமாதான். ‘வெயில்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால்தான் நான் நடிகையாகி இருக்கிறேன். “ஏதோ ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நல்ல கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். இப்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அதில் ஒரு படம் தான் ‘தீயோர்க்கு அஞ்சேல்’.