You are here

ஐஎஸ் தாக்குதல்களால் ஈர்க்கப்பட்ட சந்தேக நபர்

  • படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: நியூயார்க்கின் மேன்ஹாட்டன் பகுதியில் உள்ள பேருந்து முனையத்திற்கு அருகே குழாய் வெடிகுண்டை வெடிக்கச் செய்த சந்தேக நபர், ஐரோப்பாவில் கிறிஸ்மஸ் மார் கெட்டுகளைக் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஈர்க்கப்பட்டவன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலிசார் கூறினர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாதி களின் இலக்குகளைக் குறி வைத்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதற்குப் பதிலடியாக இத்தாக்குதலை நடத்தியதாக பிடிபட்ட அந்த சந்தேக நபர் போலிசாரிடம் கூறியதாக அதிகாரிகள் கூறி யுள்ளனர். நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கத்திற்கு அருகில் உள்ள மேன்ஹாட்டன் பகுதியில் கிறிஸ்மஸ் அலங்கார சுவரொட்டி களைப் பார்த்த பிறகே தாக்குதல் நடத்துவதற்கு அந்த இடத்தை அவன் தேர்ந்தெடுத்தாகவும் தெரியவந்துள்ளது.

நியூயார்க்கில் குழாய் வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு அருகே சுரங்க நடைபாதை மூடப்பட்ட நிலையில் ரயில் பயணிகள் அங்கிருந்து பதற்றத்துடன் வெளியேறுகின்றனர். படம்: ஏஎஃப்பி