You are here

நட்சத்திர ஜோடியின் திருமண வரவேற்பு டெல்லி, மும்பையில்

  • விராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மா இணை. படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராத் கோஹ்லி, இந்தி திரையுலக நட்சத்திரம் அனுஷ்கா சர்மாவின் திருமணம் இத்தாலியில் நடந்தேறியது. இவர்களது திருமண வரவேற்பு விழா வரும் 21, 26 ஆகிய தேதி களில் டெல்லியிலும் மும்பையிலும் நடைபெறவுள்ளது. தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல் முறையாக சந்தித்த இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். முதலில் மறைமுகமாக இருந்த இந்தக் காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இவர்களது திரு மணம் பற்றி அவ்வப்போது வதந்தி பரவிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் விராத் கோஹ்லி=அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்தத் திருமணத்தில் நெருங் கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்தத் தகவலை விராத் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு விழா இந்தியா வின் இரண்டு நகரங்களில் நடைபெறவுள்ளது. டெல்லியில் நடைபெறும் திருமண வரவேற்பில் குடும்ப உற வினர்கள் மட்டும் கலந்துகொள் வார்கள். மும்பையில் நடைபெறும் திரு மண வரவேற்பு விழாவில் கிரிக் கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத் திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார் கள்.

இத்தாலியில் நடந்த திருமண நிகழ்வில் சடங்குகளை நிறைவேற்றும் விராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மா இணை. படம்: ஏஎஃப்பி