You are here

சுட்டுக்கொல்லப்பட்ட போலிஸ் அதிகாரியின் மனைவி போலிசார் மீது குற்றச்சாட்டு

சென்னை போலிஸ் அதிகாரி ஒருவர் ராஜஸ்தான் மாநிலத் தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம் பவம் தமிழகத்தில் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொளத்தூர் நகைக் கடையில் கொள்ளை யடித்தவர்கள் ராஜஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர் களைப் பிடிக்க முயன்றபோது மதுரவாயல் காவல்துறை ஆய் வாளர் பெரிய பாண்டி கொள் ளையர்களால் சுட்டுக் கொல் லப்பட்டார். கொளத்தூர் புதிய லட்சுமி புரத்தில் உள்ள முகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் கடந்த மாதம் அந்தக்கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கடையின் மேற்கூரையில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் மூன்றரை கிலோ தங்கத்தை கொள்ளை யடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை தொடர்பாக சென் ராம், சங்கர்லால் உட்பட நால் வர் ஏற்கெனவே கைது செய் யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான சென்ராமின் மகன் நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரைப் பிடிக்க ஆறு பேர் கொண்ட தனிப் படையினர் ராஜஸ்தான் சென் றனர். ஜெய்ப்பூர் அருகே கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் தனிப்படையில் இடம்பெற்றிருந்த ஆய்வாளர் பெரிய பாண்டி உயிரிழந்தார். அத்துடன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் காய மடைந்தார். இதையடுத்து அம்பத்தூர் இணை ஆணையர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் ராஜஸ்தான் விரைந்தனர். ராஜஸ்தான் போலிசார் தமிழக போலீசாருக்கு போதிய ஒத் துழைப்பு கொடுக்காததே ஆய் வாளர் பெரியபாண்டி உயிரழப் புக்குக் காரணமாகக் கூறப்படு கிறது. பெரிய பாண்டியின் மனைவி பானுரேகா, அரசுப் பள்ளி ஒன் றில் பணியாற்றி வருகிறார்.