You are here

கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனைத்துலக வடிவமைப்பு விருது

  • படம்: கூ டெக் புவாட் மருத்துவமனை

அனைத்துலக வடிவமைப்பு விருது ஒன்றை கூ டெக் புவாட் மருத்துவமனை வென்றுள்ளது. மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு எனும் கோட் பாட்டின் முன்னோடிகளில் ஒருவ ரான யேல் பல்கலைக்கழகத்தின் காலஞ்சென்ற பேராசிரியர் ஸ்டீவன் ஆர்.கெல்லர்ட்டைக் கௌரவப்படுத்தும் வகையில் இந்த அமெரிக்க விருது வழங்கப் படுகிறது. அமெரிக்காவிலிருந்து மூன்று போட்டியாளர்களையும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு போட்டியாளரையும் பின்னுக்குத் தள்ளி கூ டெக் புவாட் மருத்துவமனை விருதைத் தட்டிச் சென்றது.

“பாரம்பரிய மருத்துவமனை களைத் தாண்டி சுகாதாரப் பராமரிப்புத் துறையில் புதிய வடிவான கட்டடத்தை கூ டெக் புவாட் மருத்துவமனை அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் கட்டட வடிவமைப்பும் இயற்கை சூழலும் சிகிச்சை முறையின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது,” என்று விருது வழங்கிய அமைப்பு கூறியது. கூ டெக் புவாட் மருத்துவ மனையின் வடிவமைப்பில் மனிதர் களின் ஐம்புலன்களுக்கு முக்கி யத்துவம் கொடுத்து அவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைப்பு தெரிவித்தது. பட்டாம்பூச்சிகள், மீன்கள், பறவைகள் ஆகியவற்றின் இயற்கை இருப்பிடமாகவும் கூ டெக் புவாட் மருத்துவமனை திகழ்வதாக அது புகழாரம் சூட்டியது.

அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த போட்டிகளை முறியடித்து விருது வென்ற கூ டெக் புவாட் மருத்துவமனை. படம்: கூ டெக் புவாட் மருத்துவமனை