You are here

சீனாவில் தாக்கப்பட்ட இரு தென்கொரிய செய்தியாளர்கள்

சோல்: தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அவருடன் சென்றிருந்த செய்தியாளர்களில் இருவரை சீன பாதுகாப்பு அதிகாரிகள் அடித்துத் தாக்கியதாக தகவல்கள் கூறு கின்றன. சீனாவில் திரு மூன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகச் சென்ற தென்கொரிய பத்திரிகை யாளர்கள் 14 பேரையும் சீன அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க வில்லை என்று கூறப்பட்டது. ஒரு புகைப்படக்காரரை சுற்றிவளைத்த சீன பாதுகாப்பு அதிகாரிகள் 15 பேர், அந்த புகைப்படக்காரரை கீழே தள்ளியதாகவும் மற்றொரு புகைப்படக்காரரையும் அவர்கள் உதைத்து தாக்கியதாகவும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த தென்கொரிய செய்தியாளர்கள் கூறி யுள்ளனர். இப்படியொரு சம்பவம் நடந்ததை தென்கொரிய வெளி யுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.