You are here

சிங்கப்பூர் விமானக் காட்சி

பயணிகள் விமானங்களுடன் வானைக் கிழித்துக்கொண்டு செல்லும் போர் விமானங்களையும் நேரில் கண்டு ரசிக்கும் அரிய வாய்ப்பை பொதுமக்கள் சிங்கப்பூர் விமானக் காட்சியில் பெறலாம். பல நிறுவனங்களின் ராட்சத விமானங்களையும் காட்சிக்கு வைக்கும் இந்த விமானக் காட்சி, ஆசியாவின் ஆகப் பெரிய விமானக் காட்சி. கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் விமானங்கள் காட்சியில் இடம் பெறும். ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்நிகழ்ச்சியில் விமானங்கள் வானில் நிகழ்த்தும் சாகசங்களையும் கண்டு மகிழலாம். தேதி: பிப்ரவரி 6-9, இடம்: சாங்கி கண்காட்சி நிலையம், விவரங்களுக்கு: https://www.singaporeairshow.com