You are here

இலவச மருத்துவ பரிசோதனை

சாங்கி, ஸ்ரீ ராமர் ஆலயம், மவுண்ட் அல்வெர்னியா மருத் துவமனை, C3A, தேசிய சிறுநீரக அறநிறுவனம், சிக்லாப் பல இன, பல சமய நன்னம்பிக்கை வட்டம் இணைந்து வழங்கும் இலவச மருத்துவப் பரிசோதனை இன்று 7ஆம் தேதி ஞாயிறு காலை 8.30 மணி முதல் 11 மணி வரை உடல் எடைக் குறியீடு, ரத்த அழுத்தப் பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும் தினமான ஜனவரி 21ஆம் தேதி, ஞாயிறன்று ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய தமிழ்ப் பேச்சு காலை 10 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும். மேல்விவரங்களுக்கு திரு விஜய்யுடன் 91482343 என்ற எண்கள் வழி தொடர்புகொள்ள லாம். மின்னஞ்சல் முகவரி: sramartemple @ gmail.com