You are here

ஒரு பிள்ளையின் வெற்றிக்கான ரகசியம் இந்திராணி

  • இந்திராணி ராஜா

இந்திராணி ராஜா

நம் பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். வெற்றி எனும்போது நான் கல்வித் தேர்ச்சியை மட்டுமே குறிப்பிடவில்லை. நல்ல குணம், நற்பண்புகள், வாழ்க்கையில் முன்னேறக்கூடிய ஆற்றல், நல்ல குடிமக்களாக நடந்து கொள்ளுதல், சமூகத்தால் மதிக்கப்படுதல் ஆகியவை யும் வெற்றியில் உள்ளடங்கும்.

நம் பிள்ளைகளின் வெற்றியை நாம் எப்படி உறுதிப்படுத்துவது? பள்ளியில் அதிக முயற்சி எடுத்துப் படிப்பதே இதற்கான முக்கிய அடிப்படை என பலரையும் போலவே நானும் ஒரு காலத்தில் நினைத்ததுண்டு. ஆனால், நான் கல்வி அமைச்சில் இருந்தபோது, பிள்ளைகளின் வெற் றிக்கு எது உதவுகிறது என்பது பற்றி சில சுவாரசியமான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.

கல்வி அமைச்சு நடத்திய ஆரம்பக் கல்வி மாநாடு ஒன்றில், “உணர்வற்ற முக ஆராய்ச்சி” எனக்கு அறிமுகமானது. டாக்டர் எட்வர்ட் ட்ரோனிக் என்பவர் 1975ம் ஆண்டு நடத்திய புகழ்பெற்ற ஆராய்ச்சி இது. பெற்றோருக்கும் பிள் ளைக்கும் இடையிலான கலந்துறவாடலின் குறிப்பிடத்தக்க விளைவை இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியது.

மிகச்சிறிய வயதிலேயே பிள்ளைகள் தங்களது சுற்றுப்புறத்தை உணர்ந்து, அதற்கேற்ப செயல்படுகிறார்கள் என்பதை ஆராய்ச்சி புலப்படுத்தியது.

பிள்ளைகளுக்குக் கிடைக்கும் சமூகக் கலந்துறவாடலின் தரம் மிகவும் முக்கியம். பெற்றோரிடமிருந்து சாதகமான உணர்வு பூர்வ தொடர்பும் கவனிப்பும் போதிய அளவில் கிடைக்காவிட்டால், பிள்ளை களுக்குப் பாதுகாப்பின்மை, பரிதவிப்பு, மனக்கலக்கம் ஏற்பட்டு, பாதகமான நடத்தையை பிள்ளைகள் வெளிக்காட்டக் கூடும்.

எனவே, ஒரு பிள்ளையின் வெற்றிக் கான முதல் காரணம் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலான உறவுமுறையே. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அடிக்கடி பேசி, ஈடுபடுத்தி, கற்றுக் கொண்டு, விளையாடி, பந்தம் வளர்த்து, பிள்ளைகளின் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி, அவர்களுக்கு ஆதரவாக இருக் கும் அன்பும் அக்கறையும் மிக்க சூழலில் வளரும் பிள்ளைகள், தன்னம்பிக்கையுடன், நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்ச்சி அடைந்து, வாழ்க்கையின் பிற்பகுதியில் சிறப்படைய அதிக சாத்தியமுண்டு.