You are here

இந்திய பாரம்பரியத்தைப் பரப்புவதில் ஆர்வம்

வில்சன் சைலஸ்

இந்தியர் நற்பணிச் செயற்குழுவில் இணைந்து தொண்டூழியம் புரிவது என்றால் சமூக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யத் தேவையான உதவிகள் செய்வதுதான் என்று தொடக்கத்தில் சாதாரணமாக நினைத்தார் ஜெகதீஷ்வரன் ராஜு, 30. ஆனால், அத்தகைய நிகழ்ச்சி கள் குடியிருப்பாளர்களுக்கு எந்த அளவு பயனளிப்பதாக உள்ளன என்பதையும் அவற்றை ஏற்று நடத்த பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருப்பதையும் அக்குழுக் களுடன் சேர்ந்து தொண்டூழியத் தில் ஈடுபட்டபோது ஜெகதீஷ்வரன் அறிந்துகொண்டார்.

அப்படித் தொண்டூழியத்தில் ஈடுபடுவதன் மூலம் தலைமைத் துவப் பண்புகளுடன் மற்றவர்கள் உடன் எப்படிப் பழகுவது என்பது போன்ற வாழ்க்கைத் திறன்களை யும் இவர் கற்றுக்கொள்ள முடிந் தது. செங்ஹுவா குடியிருப்பாளர் ஆலோசனைக் குழுவின் செயலா ளராக இருந்துகொண்டே செங் ஹுவா இந்தியர் நற்பணிச் செயற் குழுவில் தொண்டாற்றி வரும் இவரின் அடித்தள அமைப்புப் பயணம் பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

கடந்த 2008ஆம் ஆண்டு தேசிய சேவையை முடித்துவிட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற் காகக் காத்திருந்தபோது, தம்மு டைய மாமாவின் மூலம் செங் ஹுவா இந்தியர் நற்பணிச் செயற் குழுவிற்கு இவர் அறிமுகமானார். தொடக்கத்தில் நிறைய கூட்டங் களுக்குச் செல்லவேண்டியிருந்த தாகக் குறிப்பிட்ட இவர், “அப்போது எல்லாம் என்ன நடக்கிறது, ஏன் இவ்வளவு பேசுகிறார்கள் என்று தெரியாதவனாய் அமர்ந்திருப் பேன்,” என்றார்.

எனினும், இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளின் முக்கியத்துவமும் மக்களிடம் அவை ஏற்படுத்தும் தாக்கமும் நாளடைவில் புரிய வர, இதர உறுப்பினர்களின் உதவி யுடன் பல நிகழ்ச்சிகளைச் சுயமாக ஏற்பாடு செய்து நடத்துமளவிற்கு ஜெகதீஷ்வரனுக்கு நம்பிக்கையும் தைரியமும் கிட்டின.

 

சில ஆண்டுகளுக்கு முன் செங் ஹுவா தொகுதியில் பொங்கல் கொண்டாட்ட அலங்காரங்களைச் செய்த பல இன தொண்டூழியர்களுடன் ஜெகதீஷ்வரன் ராஜு.

படம்: ஜெகதீஷ்வரன் ராஜு