You are here

காற்பந்தில் சாதிக்க விழையும் கிரித்தி

சுதாஸகி ராமன்

பெண்கள் வழக்கமாகத் தேர்ந்து எடுக்காத விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார் கிரித்தி புஷ்பநாதன், 20. காற்பந்து மீது கிரித்திக்குக் கொள்ளை ஆர்வம். கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் அந்த விளை யாட்டில் தமது திறமையை வெளிப் படுத்தி வருகிறார். சிராங்கூன் தொடக்கக் கல்லூ ரியில் பயின்றபோது இணைப்பாட நடவடிக்கையாக அப்பள்ளியின் பெண்கள் காற்பந்துக் குழுவில் சேர்ந்தார் இவர். நாளாக நாளாக காற்பந்து மீதான நாட்டம் அதி கரிக்க, பல்கலைக்கழகக் காற் பந்துக் குழுவிலும் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கினார். சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக பெண்கள் காற்பந்தாட்டக் குழு வின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற இவர், பல்கலைக் கழகத்தின் ‘ஃபுட்சால்’ (உள்ளரங்கு காற்பந்து) குழுவிலும் இடம்பெற்று உள்ளார்.

சிறு வயதில் தம்முடைய இரு சகோதரர்களும் காற்பந்து விளை யாடியதைக் கண்டபோது, தாமும் திடலில் இறங்கி ஆண்களுக்கு நிகராக காற்பந்து ஆடவேண்டும் என்ற ஆசை பிறந்தது. “பத்து ஆண்டுகளுக்கு முன் தந்தையுடன் சேர்ந்து பொழுது போக்காக ‘கோல்ஃப்’ விளையாடி னேன். ஆனால், ‘கோல்ஃப்’ ஆட் டத்தைப் போலல்லாமல் குழுவாக இணைந்து ஆடும் விளையாட்டு களின் மீதே எனக்கு ஆர்வம் இருந்தது,” என்றார் கிரித்தி.

அனுபவமிக்க ஆண் விளையாட்டாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு காற்பந்து விளையாட்டில் மெருகேறியிருக்கும் கிரித்தி புஷ்பநாதன் (இடது). படம்: கிரித்தி புஷ்பநாதன்