You are here

கனமழையால் 9 இடங்களில் திடீர் வெள்ளம்

கனமழை காரணமாக சிங்கப் பூரின் கிழக்குப் பகுதியில் ஒன்பது இடங்களில் நேற்றுக் காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தீவு முழுவதும் பரவலாக மழை பெய்தபோதும் ஆக அதிக மாக கிம் சுவான் ரோட்டில் காலை 6.20 மணி முதல் 10.25 மணி வரை 118.8 மி.மீ. மழை பதிவான தாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது. இது, ஜனவரி மாதத்தில் பெய்யும் சராசரி மழை அளவில் பாதி என்பது குறிப்பிடத் தக்கது. காலை 8.30 மணிக்குத் தொடங்கிய திடீர் வெள்ளம் 10.30 மணியளவில் தணிந்தது. சுங்கை டோங்காங், சுங்கை காலாங் ஆகிய ஆறுகளிலும் பிடோக் கால்வாயிலும் கிட்டத் தட்ட முழுக் கொள்ளளவில் நீர் ஓடியது. அப்பர் சாங்கி ரோட்டை ஒட்டிய பகுதியில் முழங்கால் உயரத்திற்கு நீர் ஓடியதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்கள் அனுப்பிய படங்கள் காட்டின. தோ பாயோ லோரோங் 6ல் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்ததில் லாரி ஓட்டுநர் ஒருவரும் அந்த லாரியில் பயணம் செய்த இன்னொருவரும் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து காலை 10 மணியளவில் தகவல் கிடைத்த தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காயமடைந்த இருவரும் அவசர மருத்துவ வாகனம் மூலம் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.