You are here

‘பந்தடிப்பாளர்களே தோல்விக்கு காரணம்’

  • படம்: ராய்ட்டர்ஸ்

கேப் டவுன்: பந்தடிப்பாளர்கள் சரியாக விளையாடாததே தோல் விக்கு காரணம் என்று சாடி உள்ளார் இந்திய அணித் தலை வர் விராத் கோஹ்லி. முதல் டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் னாப்பிரிக்காவிடம் இந்திய அணி தோற்ற பிறகு பேசிய கோஹ்லி இவ்வாறு கூறினார். “முதல் இன்னிங்சில் தென் னாப்பிரிக்காவை 220 ஓட்டங் களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். “ஆனால் அபாரமான பந்து வீச்சால் அவர்களை 2வது இன் னிங்சில் 135 ஓட்டங்களுக்கு சுருட்டிவிட்டோம்.

“எதிரணியின் 20 விக்கெட்டு களையும் பந்துவீச்சாளர்கள் கைப் பற்றினாலும் பந்தடிப்பாளர்கள் சரியாக விளையாடவில்லை என் றால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. “ஒரு பந்தடிப்பாளராவது 75 முதல் 80 ஓட்டங்கள் எடுத்து இருந்தால் வெற்றி பெற்று இருக் கலாம். பந்தடிப்பாளர்களிடையே நல்ல ‘பார்ட்னர்‌ஷிப்’ அமைய வில்லை. “இந்த டெஸ்டில் செய்த தவறுகளை இனி வரும் போட்டி களில் திருத்திக்கொள்ள வேண் டியது அவசியமானது.

இரண்டாவது இன்னிங்சில் 62 பந்துகளைச் சந்தித்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி 28 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். படம்: ராய்ட்டர்ஸ்