You are here

செய்தியாளர் வேடத்தில் நித்யா

  •  நித்யா மேனன்

புதுப்படம் ஒன்றில் செய்தியாளர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நித்யா மேனன். இப்படம் நான்கு மொழிகளில் தயாராகிறது. ஒரே சமயத்தில் நான்கு மொழிகளிலும் நடிப்பதால் சிரமமாக உள்ளது என்கிறார் நித்யா. ‘பிராணா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் வெளியாகும்போது பல்வேறு மட்டங்களில் அதிர்வலை கள் ஏற்படும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வி.கே. பிரகாஷ் இயக்கும் இப்படம் பிரபல பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் வாழ்க்கையை மைய மாக வைத்து உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார் கௌரி லங்கேஷ்.

இதையடுத்து இக்கொலையை மையமாகக் கொண்டு ‘பிராணா’ தயாராவதாக தகவல். “ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியே நான்கு முறை நடிக்கவேண்டி இருப்பதால் மிகுந்த சிரமத்தை தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது,” என்கிறார் நித்யா. இதுபோல் வேறு யாரும் நடித் திருக்கிறார்களா என்பது தமக்குத் தெரியவில்லை என்றும் எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். கௌரி லங்கேஷ் கொலை வழக்கு பாணியிலான கதை என் றாலும்கூட அவர் கொல்லப்படுவ தற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் பணிகள் தொடங்கி விட்டதாம். அச்சம்பவத் துக்கும் இக்கதைக்கும் தொடர் பில்லை என்றும் அடித்துச் சொல்கிறது படக்குழு.