You are here

‘இந்தியாவுக்கு எதிராக வேகப்பந்து வீச்சுத் தாக்குதல் தொடரும்’

கேப் டவுன்: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தொடர் முழு வதும் நான்கு வேகப்பந்து வீச்சா ளர்களுடன் தாக்குதலைத் தொடர திட்டமிட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தி யாவுக்கு எதிராக நான்கு வேகப் பந்து வீச்சாளர்களைக் கொண்டு தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது அதன் முக்கிய பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் காயமடைந்ததை அடுத்து ஆடு களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

மேலும் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பங்கேற்க முடியாத நிலையில், அவருக்குப் பதில் அணியில் இன்னோர் வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப் படுவார் என்று தெரிகிறது. இது குறித்து கிப்சன் கூறுகை யில், “வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாகப் பயன்படுத்த வேண் டும் என்று நினைப்பவன் நான். நான்கு வேகப்பந்து வீச்சாளர்களு டன் களம் இறங்கும்போது அணியின் மற்ற விஷயங்கள் சரியாக இருக் கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். “எதிர்வரும் டெஸ்ட் போட்டி யின் ஆடுகளத்தன்மையும் நான்கு வேகப்பந்து வீச்சாளர் களுக்கு உகந்த வகையில் இருக் கும் என்று எதிர்பார்க்கிறோம்.