You are here

‘கட்டட மேற்பூச்சு சான்றளிப்பை சந்தேகிக்க ஆதாரமில்லை’

கட்டட மேற்பூச்சு விவகாரத்தால் கட்டடச் சான்றளிப்பு முறை குறித்துக் கேள்வி எழுப்புவது அவசரமாக முடிவுக்கு வருவதை போன்றது என சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறி இருக்கிறார். சான்றளிப்பு முறையைச் சந்தே கிப்பதற்குத் தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் அவர் கூறி னார். “ஒட்டுமொத்த சான்றளிப்பு முறையிலும் குறைபாடு இருக்கி றதா என இந்தக் கட்டத்தில் முடிவுக்கு வருவது பற்றி கவன மாக இருக்கவேண்டும்.

“ஏனெனில், சான்றளிப்பு முறை பிரசித்திபெற்ற அனைத்துலக (மற்றும் உள்ளூர்) அமைப்புகளை அடையாளம் காண்பதைச் சார்ந்திருக்கிறது,” என்றார் அவர். இந்த அமைப்புகள் உலகெங் கிலும் அங்கீகரிக்கப்பட்டவை என்றும் திரு சண்முகம் கூறினார். தீப்பற்றக்கூடிய தகடுகளை இங்கு உள்ள கட்டடங்களின் வெளிப்புற மேற்பூச்சாகப் பயன்படுத்த எப்படி சான்றளிக்கப் பட்டது எனப் பாட்டாளிக் கட்சியின் தொகுதியில்லா உறுப்பினர் டேனியல் கோ கேட்டார். கட்டட மேற்பூச்சாகப் பயன் படுத்தப்பட்ட “பொலியா”, “பொலி=கோர் எஃப்ஆர்” வகை அலுமினியத் தகடுகளைச் சுட்டிக் காட்டி அவர் பேசினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியன்று ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ கட்டடத்தின் கட்டட மேற்பூச்சை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்தக் கட்டடத்தின் வெளிப்புறத்தில் போடப்பட்டிருந்த மேற்பூச்சு பாதுகாப்பு தரத்துக்கு உட்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்