You are here

அகுவேரோவின் கோலால் மனமுடைந்த பிரிஸ்டல்

  • படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி- யின் நட்சத்திர வீரர் செர்ஜியோ அகுவேரோவின் ஒரு கோல், பிரிஸ்டல் குழுவைத் தோல்வியைத் தழுவச் செய்தது. லீக் கிண்ணக் காற்பந்தின் அரையிறுதி ஆட்டத் தின் முதல் சுற்றில் இக்குழுக்கள் மோதின. ஜான் ஸ்டோன்ஸின் தப்பாட்டம் காரணமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பை 44வது நிமிடத்தில் கோலாக்கினார் ரெய்ட். இதனால் பிரிஸ்டல் குழு ஒரு கோல் முன் னிலை பெற்றது. ஆனால் அந்த முன்னிலையை அடுத்த 11வது நிமிடத்திலேயே சமன் செய்துவிட்டார் சிட்டியின் டிபிரய்ன. அதன் பிறகு ஆட்ட நேரம் முழுவதும் இரு குழுக்களும் கோல் எதுவும் போடவில்லை.

இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்துவிடும், எதிரணி மண் ணில் ஒரு கோல் என்பதும் இரண் டாவது சுற்றில் தங்களுக்குச் சாத- க மாக இருக்கும் என்ற பிரிஸ்டல் வீரர் களின் நம்பிக்கையை உடைத்துவிட்டார் செர்ஜியோ. காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது, பெர்னார்டோ உதைத்த பந்தை அகுவேரோ கோலாக்க பிரிஸ்டலின் கனவு கலைந்தது. எனவே மான்செஸ்டர் சிட்டி குழு 2-1 என்ற கோல் கணக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

லீக் கிண்ணத்திற்கான அரையிறுதி ஆட்டத்தின்போது எதிரணியின் வலைக்குள் பந்தை முட்டித்தள்ளி சிட்டியின் வெற்றிக் கோலை போட்டார் செர்ஜியோ அகுவேரோ. படம்: ஏஎஃப்பி