You are here

‘ஜூ கூன் விபத்தைத் தவிர்க்க ரயில் ஓட்டுநருக்கு நேரம் போதவில்லை’

  • போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான். தொலைக்காட்சிப் படம்

ஜூ கூன் எம்ஆர்டி நிலையத்தில் நின்றிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயிலின் ஓட்டுநருக்கு அவசர பிரேக் போடப் போதிய நேரமில்லை எனப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். ரயில்களுக்கு இடையில் பாது காப்பான தூரம் இருப்பதை உறுதிப்படுத்தும் ரயிலின் இரண் டாவது பாதுகாப்பு அம்சம் செயலிழக்கக்கூடும் என ரயில் இயக்கக் கட்டுப்பாட்டு மையம் எதிர்பார்க்காதது இதற்குக் காரணம் என்றார் அவர்.

சென்ற ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தின் போது, ரயிலின் முதலாவது பாதுகாப்பு அம்சம் ஏற்கெனவே செயலிழந்து, இரண்டாவது பாது காப்பு அம்சத்துடன் ரயில் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டாவது பாதுகாப்பு அம்சமும் செயலிழக்கும் எனக் கட்டுப்பாட்டு மையம் எதிர் பார்க்காததால் ரயில் தானியக்க முறையில் ஓட அனுமதிக்கப் பட்டது. ரயில் தானியக்க முறையில் ஓடிக் கொண்டிருக்கும் போது ஓட்டுநர் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அதனால், பிரேக் போடவேண்டிய நிலை ஏற்படும் என ஓட்டுநர் எதிர்பார்க்க வில்லை. நிலைமையை அவர் உணர்வதற்குள் காலம் கடந்து விட்டது. சுய நடமாட்ட உந்து வாகனத் தின் ஓட்டுநர் உயிரிழந்த விபத்தை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திரு கோ பயன்படுத்தினார்.

போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான். தொலைக்காட்சிப் படம்