You are here

தாய்லாந்து வழியாக கார்களைக் கடத்தும் மலேசிய கும்பலை ஒழிக்க தீவிர நடவடிக்கை

  • படம்: த ஸ்டார் இணையம்

பேங்காக்: மலேசியாவைச் சேர்ந்த கார் கடத்தும் கும்பல் தாய்லாந்து வழியாக கார்களைக் கடத்துகிறது என்று மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித் தது. லாவோஸ், கம்போடியா, வியட் னாம் ஆகிய வட்டார நாடு களுக்குக் கார்கள் கடத்தப்படு கின்றன என்றும் அது குறிப் பிட்டது. கடந்த 2015ஆம் ஆண்டி லிருந்து மலேசியாவிலிருந்து திருடப்பட்ட 100க்கும் மேற்பட்ட திருட்டுக் கார்களை தாய்லாந்து காவல்துறையினர் கைப்பற்றியுள் ளனர் என்று மலேசிய போலிஸ் குற்றவியல் விசாரணைத் துறை யின் இயக்குநர் வான் அஹமட் நஜ்முடீன் முஹமட் தெரிவித்தார். அப்போதிலிருந்து கைப்பற்றப் பட்ட கார்கள் மலேசியாவிடம் ஒப் படைக்கப்பட்டு வருகின்றன.

“மலேசிய கார் கடத்தல் கும் பலுக்கு தாய்லாந்துதான் முக்கிய பாதை,” என்று செய்தியாளர்க ளிடம் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் பேங்காக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் திருடப்பட்ட கார்களை அவர் பெற்றுக்கொண்டார். இவற்றில் பெரும்பாலானவை ஆடம்பர கார்கள். இரு நாடுகளிலும் செயல்படும் கார் திருட்டுக் கும்பலை ஒழித்துக் கட்டுவதற்காக இருநாட்டு போலிஸ் அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேம் படுத்தப்படும் என்று மலேசிய காவல்துறை அதிகாரி கூறினார்.

மலேசியாவில் திருடப்பட்ட கார்களை தாய்லாந்து போலிஸ் ஆலோச கரான ஜெனரல் விடாயா பிராயோங்பான்னிடமிருந்து மலேசியாவின் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அஹமட் நஜ்முடீன் முஹமட் பெற்றுக்கொள்கிறார். படம்: த ஸ்டார் இணையம்