You are here

இந்தியாவின் புலம்பெயர்ந்த இளையர்களை ஒருங்கிணைக்க முயற்சி

சுதாஸகி ராமன்

இந்தியா, ஆசியான் வட்டார நாடு களுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்தி அதன் மூலம் ஆசியான் நாடுகளில் இந்தியாவின் புலம்பெயர்ந்த இளையர்களை ஒருங்கிணைக்க முயற்சி வாழும் இந்திய இளையர்களுக்கு இந்தியாவுடன் உள்ள இணைப்பை பலப்படுத்துவது பற்றி அண்மை யில் ஆராயப்பட்டது. ஆசியான் வட்டாரத்தில் வாழும் இளையர்கள் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கும் வகையில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்தல், அவர்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை மேம்படுத்துதல், அவர்களைக் கொண்டு இந்திய மரபுடைமை யைப் பேணிக் காத்தல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட் டன. இந்தியாவின் மேம்பாட்டுக்கு பல வழிகளில் உதவியுள்ள புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங் களிப்பைக் கொண்டாட ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து நடத்தப்படும் ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ எனும் மாநாட்டில் இளை யர்கள் பற்றிய கலந்து ரையாடலும் இடம் பெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ரவீந்திரன், பிரவா, கம்யூட்டினி ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் நிறுவனர் குமாரி அஷ்ராஃப் பட்டேல், இந்திய இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் திரு அதுல் தெர்முனிக்கர், இளம் சீக்கியர் சங்கத்தின் தலைவர் திரு மல்மிந் தர் ஜிட் சிங், தென்கிழக்காசிய கல் விக்கழகத்தின் இணை ஆசிரியர் திரு முஸ்தபா இஸ்ஸுதீன், இந்திய மரபுடைமை நிலையத்தின் காப்பாளர் குமாரி நளினா கோபால். படம்: இந்தியத் தூதரகம்