You are here

களைகட்டிய பொங்கல் கொண்டாட்டங்கள்

  •  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முஹம்மது ஃபைரோஸ்

லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேன், ஹேஸ்டிங்ஸ் சாலை பகு தியில் அமைந்துள்ள பொங்கல் கிராமத்தில் நேற்று மாலை பொங் கல் கொண்டாட்டங்கள் கோலாகல மாக நடைபெற்றன. ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடை மைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் இந்திய சமூகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண் டனர். பின்னர், சிறப்பு விருந்தின ராக வருகை புரிந்த தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங்குடன் சேர்ந்து அவர்கள் பொங்கல் வைத் தனர்.

இவ்வாண்டு தைப் பொங்கல் ஞாயிறு அன்று வந்ததால் உள்ளூர் வாசிகளும் வெளிநாட்டு ஊழியர் களும் பொங்கல் கிராமத்திற்கு பெரும் திரளாக வந்திருந்தனர். அதுவும் வானிலை ஒத்துழைத்தது அவர்களின் கொண்டாட்ட உணர்வை மேலும் அதிகரித்தது. சிங்கப்பூரில் பல இன, பல சமய மக்கள் பரஸ்பர மரியாதையுட னும் நல்லிணக்கத்துடனும் வாழும் நிலையில் ஒருவர் மற்றொருவரு டைய பண்டிகையை இணைந்து கொண்டாடுவது முக்கியம் என வலியுறுத்தினார் திரு மெல்வின் யோங்.

“பொங்கல் கொண்டாட்டத் திற்கு லிஷா, இந்தியர்களுடன் இந்தியர் அல்லாதவர்களையும் அழைத்திருந்தது நம் சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக் கிறது,” என்று அவர் சொன்னார். அத்துடன், லிஷாவும் இந்திய மரபுடைமை நிலையமும் இணைந்து அடுத்த சில நாட்களுக்கு பொங் கல் திருநாள் குறித்து பயிலரங்கு களை ஏற்பாடு செய்திருப்பதைச் சுட்டிய திரு யோங், அவற்றில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

ஹேஸ்டிங்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கால்நடைப் பண்ணைக்கு நேற்று வந்திருந்த தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் மெல்வின் யோங், அங்கிருந்த கன்றுக் குட்டியின் கழுத்தில் பட்டுத்துணி கட்டுகிறார். மாடுகள், கன்றுகள், ஆடுகளைக் காண பலர் அங்கு கூடியிருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்