You are here

ஆண்டாளை உயர்த்திப் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம்: வைரமுத்து விளக்கம்

சென்னை: ஆண்டாளை உயர்த்திப் பேசுவதே தமது கட்டுரையின் நோக்கம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தம்மை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தை தம்மால் எப்படி புண்ப டுத்த முடியும்? என டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட் டுள்ளார். அண்மையில் ஆண்டாள் குறித்து வைரமுத்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. அவர் இதற் காக மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் வலியுறுத்தின.

இதையடுத்து தமது கட்டுரை யார் மனதேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துவ தாக வைரமுத்து தெரிவித்தார். அதன் பிறகும் அவரைப் பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால், திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வைரமுத்துவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். இந்நிலையில் தமது கட்டுரை குறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார் வைரமுத்து.

தமிழை ஆண்டாள் என்ற தமது கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். “அருள் கூர்ந்து அந்தக் கட் டுரை முழுவதையும் தவறாமல் படிக்க வேண்டும். அப்போது என் கட்டுரை யார் மனதையும் புண் படுத்தாது என்பது விளங்கும். “குறிப்பாக என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கும் எத்தனையோ தாயுள்ளங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று என் மனம் துடிக்கிறது,” என வைரமுத்து மேலும் தெரி வித்துள்ளார். ஆண்டாள் தமிழை வணங் குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எழுத்தின் பயன் அன்பும் இன்பமும் மேன்மையும் என்று தாம் கருதுவதாகக் கூறியுள்ளார்.

“46 ஆண்டுகளாகத் தமிழோடு வாழ்ந்து வருகிற நான், என்னை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தைப் புண்படுத்துவேனா?” என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார். தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை என்றும், பிற்காலத்தில் அச்சொல்லின் பொருள் மாற்றம் பெற்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். பழங்காலத்தில் நறுமணத்தை மட்டுமே குறித்த நாற்றம் என்ற சொல், பிற்காலத்தில் துர்நாற்றம் என்றே திரிந்துவிட்டது. “அப்படித்தான் ஆண்டாள் காலத்தில் உயர் பொருளில் வழங்கப்பட்ட சொல், பிற்காலத்தில் பொருள் மாற்றம் பெற்றுவிட்டது. பிற்காலப் பொருளைக் கொண்டு அக்காலச் சொல்லைப் புரிந்து கொள்ளக்கூடாது,” எனவும் கவிஞர் வைரமுத்து தமது டுவிட்டர் பதிவில் மேலும் தெரி வித்துள்ளார்.