You are here

ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த இளையர் காளை முட்டி பலியானார்

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்த 19 வயது இளையர் மாடு முட்டி பலியானார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியைச் சேர்ந்த காளி முத்து என்ற அந்த இளையர் நேற்று மதுரை, பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தார். காளைகள் அவிழ்த்து விடப் படும் பகுதியின் அருகே நண்பர் களோடு நின்று காளிமுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டி ருந்த போது, நான்கு காளைகள் ஒருசேர வெளியே வந்துள்ளன. அதில் ஒரு காளை காளி முத்துவை குறிவைத்து முன்னேறி அவரது வயிற்றில் பலமாக தாக்கியது.

இதையடுத்து அவரை கோரிப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் போகும் வழியிலேயே காளிமுத்து உயிரிழந் தார். காளிமுத்து குடும்பத்துக்கு அரசும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுக் குழுவினரும் உதவி செய்ய வேண்டும் என அவரது நண்பர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உயிரிழந்த காளிமுத்துவுக்கு தந்தை இல்லை. ஐந்து ஆண்டு களுக்கு முன்பே அவர் காலமாகி விட்டார். தனது தாய் மற்றும் 15 வயது சகோதரியுடன் வசித்து வந்தார் காளிமுத்து.

தன் ஊரில் உள்ள ஆலையில் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். இந் நிலையில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்கச் சென்று அவர் உயிரிழந்தது அவரது தாயையும் தங்கை யையும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கடித் துள்ளது.

ஜல்லிக்கட்டை காளைகள் அவிழ்த்துவிடப்படும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிலருக்கும் காளைகள் முட்டியதில் காயம் ஏற்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு மதுரை, பாலமேட்டில் ஜல்லிக் கட்டு கோலாகாமாக தொடங்கிய து. இந்த ஜல்லிக்கட்டில் 1,080 காளைகள் பங்கேற்றன. களத்தில் 1,188 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 1,080 காளைகள் பங்கேற்றன. 1,188 மாடு பிடி வீரர்களும் களமிறங்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும் வீரர்களுக்கும் இருசக்கர வாகனம், கட்டில், தங்கக் காசு, பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டன. படம்: ஏஎஃப்பி