You are here

ஜோகூர் சாலை கார் விபத்தில் மூவர் உயிர் தப்பினர்

மெர்சிங்: ஜோகூர் சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் ஒரு பள்ளத்தில் விழுந்ததில் அக்காரில் சென்ற மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த சாலையில் 15 மீட்டர் ஆழத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டிருந்ததாகவும் அதன் அருகே உள்ள பள்ளத்தில் அக்கார் விழுந்ததாகவும் கூறப்பட்டது. மெர்சிங் நகருக்கு அருகே நேற்று காலை அந்த விபத்து நிகழ்ந்தது.