You are here

சென்னை பக்கத்துல

காதல் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ரசிகர் கள் மனதில் பதியும் வகையில் உருவாகி இருக்கிறது ‘சென்னை பக்கத்துல’. அறிமுக நாயகன் சீனு, கமலினி ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களுடன் பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம், அஞ்சலிதேவி, ஓ.ஏ.கே.சுந்தர், வாசு விக்ரம், நெல்லை சிவா, கிங்காங் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

“நாயகன் சீனுவுக்கு இதுதான் முதல் படம். என்னுடைய அனுபவத்தில் பல பெரிய நாயகர்களின் படங்களில் வேலை பார்த்துள்ளேன். பெரிய நடிகர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிடலாம். இந்தப் படத்தையும் படப்பிடிப்பு தொடங்கி ஒரே மூச்சாக முடித்தோம். “நாயகனின் ஒத்துழைப்பு இல்லாமல் இதை சாதித்திருக்க முடியாது. கிராமத்தில் இருக்கும் யதார்த்தமான இளைஞனாக அசத்தியுள்ளார் சீனு. பெரிய நடிகர்களே தயங்கும் காட்சிகளில் கூட துணிச்சலாக நடித்துள்ளார்,” என்று பாராட்டு பத்திரம் வாசிக் கிறார் இயக்குநர் வேலன்.

‘சென்னை பக்கத்துல’ படத்தில் சீனு, கமலினி.