You are here

வெளிநாட்டு ஊழியர்களின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

மினி என்வைரன்மண்ட் சர்வீஸ் குழுமம் (எம்இஎஸ்) காக்கி புக்கிட் வட்டாரத்தில் அமைந்துள்ள அத னுடைய ‘தி லியோ’ வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்காக பொங்கல் கொண்டாட்டங்களுக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தது. இரண்டு மணிநேரம் நீடித்த இந்த கொண்டாட்டங்களில் இந் திய ஊழியர்களுடன் பங்ளாதேஷ், பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 ஊழியர் கள் கலந்துகொண்டனர்.

புதுப்பானை எடுத்து, மஞ்சள் கொத்து, தோரணங்கள் உள்ளிட்ட வற்றைப் பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசி யிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிட்டனர் அவர் கள். பால் நன்கு பொங்கி வர, “பொங்கலோ பொங்கல்” என ஆனந்தக் குரலில் ஆரவாரமிட்டுக் குதூகலித்தனர் ஊழியர்கள். இவ் வாண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவ வேண்டும் என்பது அவர்களது வேண்டுதல்.

‘தி லியோ’ வெளி நாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் புதுப் பானையில் பொங்கலிடப்பட்டது. எம்இஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாஜி எஸ்.எம். அப்துல் ஜலீல் (நடுவில் மஞ்சள் நிற சட்டையில்) நேற்று முன்தினம் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். படம்: எம்இஎஸ் குழுமம்