You are here

அப்பாவிடம் பேசாத விஷயங்களே இல்லை

முதன்முறையாக ‘மிஸ்டர்.சந்திரமௌலி’ என்ற படத்தில் தன் தந்தையுடன் இணைந்து நடிக்கிறார் கவுதம் கார்த்திக். அதனால் அவர் முகத்திலும் மனதிலும் அப்படி ஒரு உற்சாகம் குடிகொண் டுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்கிறார் கவுதம். காரணம், திரையுலகில் கால்பதித்த பின் தன் குடும்பத்தாருடன் கொண்டாடும் முதல் பொங்கல் பண்டிகை இதுதானாம்.

“சிறு வயதிலேயே உறைவிடப் பள்ளிக்குச் சென்றுவிட்டேன். பொங்கல் பண்டிகை போன்ற விசேஷங்களுக்கு விடுமுறை கிடைக்காது. பெரும்பாலும் குடும்பத்தைவிட்டு பிரிந்தே இருப்பேன். ஒன்றிரண்டு பொங்கல் பண்டிகை களுக்கு வீட்டில் இருந்தாலும் அதுகுறித்த நினைவுகள் அவ்வளவு தெளிவாக இல்லை. எனவே இந்த ஆண்டு பொங்கலை மிகச் சிறப் பாகக் கொண்டாடினோம். இது மகிழ்ச்சிகரமான பொங்கல்,” என்கிறார் கவுதம். வீட்டில் இருக்கும்போது தந்தையுடன் எது குறித்தெல்லாம் பேசுவீர்கள்?

“அப்பாவுடன் பேசினால் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும். காரணம் அந்த அளவு நகைச் சுவைகளை அள்ளிவிடுவார். இதற்காகவே அவருடன் பேச பயப்படுவேன். சில சமயங்களில் தொடர்ந்து மூன்று மணி நேரம் சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறேன்.

“அவரிடம் நான் பேசாத விஷயங்களே இல்லை. உணவு சாப்பிடும்போது குடும்பத்தார் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசும் அந்தத் தருணம் அலாதியானது. மகிழ்ச்சியும் சிரிப்பும் உற்சாகமுமாகப் பொழுது கழியும்.”