You are here

ரோஹிங்யா பிரச்சினை: ஒரு நாளைக்கு 300 பேரை மியன்மாருக்குத் திருப்பி அனுப்ப இணக்கம்

டாக்கா: மியன்மாரில் ராக்கைன் மாநிலத்தில் சென்ற ஆண்டு மூண்ட கலவரத்தின்போது அங்கிருந்து தப்பிச்சென்று பங்ளாதே‌ஷில் தஞ்சம் அடைந் துள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்யா அகதிகளை மியன் மாருக்கு திருப்பி அனுப்புவது தொடர்பில் அவ்விரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன. இரு நாடுகளின் அதிகாரி களும் நேற்று முன்தினம் மியன்மாரில் சந்தித்துப் பேசியபோது அந்த இணக்கம் காணப்பட்டது. ஒரு நாளைக்கு 300 பேர் வீதம் ஒரு வாரத்திற்கு 1,500 ரோஹிங்யா அகதிகளை ஏற்றுக்கொள்ள மியன்மார் இணங்கியுள்ளது என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் பங்ளாதே‌ஷில் தஞ்சம் அடைந் துள்ள அனைத்து ரோஹிங்யா அகதிகளும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்றும் பங்ளாதேஷ் தெரி வித்துள்ளது. ராக்கைன் மாநிலத்தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததிலிருந்து 650,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் பங்ளாதே‌ஷிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.