You are here

1866ஆம் ஆண்டுக்குப் பின் அரிய நிகழ்வு

இம்மாதம் 31ஆம் தேதி மூன்று நிலவுகளைக் காணும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படவுள்ளது. ‘ரத்த’ நிலவு, ‘நீல’ நிலவு, ‘சூப்பர்’ நிலவு ஆகியவை அந்த மூன்று நிலவுகளாகும். இதுபோன்ற வரிசையில் கோலங்கள் இதற்கு முன் 152 ஆண்டுகளுக்கு முன்னர் 1866 ஆம் ஆண்டு இருந்ததாகக் கூறப் படுகிறது. இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம் அதில் ஒன்று. பூமியின் நிழலில் நிலவு நுழையும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சிவப்பாக இருக்கும் அந்த நிலவு ‘ரத்த நிலவு’ என்றும் அழைக்கப் படுகிறது. பொதுவாக ஒரு மாதத்தில் ஒரு முழு நிலவும் ஒரு பருவத்தில் மூன்று முழு நிலவுகளும் வருவது உண்டு. ஆனால், இம்மாதம் 31ஆம் தேதி இம்மாதத்தின் இரண்டாவது முழு நிலவு ஏற்படு கிறது. அதனால், அதற்கு நீல நிலவு என்று கூறப்படுகிறது.

2015ல் கேப் டவுனில் நிகழ்ந்த முழு சந்திர கிரகணத் தின்போது பூமியின் நிழலில் புகுந்த நிலவின் படங்கள். படம்: ராய்ட்டர்ஸ்