You are here

‘ஏர் இந்தியா’ நான்காகப் பிரித்து விற்பனை

புதுடெல்லி: பெருங்கடனில் மூழ்கி தத்தளிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நான்காகப் பிரித்து விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, நான்கு தனித் தனி நிறுவனங்களாகப் பிரித்து பங்குகள் விற்கப்படும் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 51 விழுக்காடு பங்குகள் விற்கப்படும் என்று ‘த எக்கானமிக் டைம்ஸ்’ வெளியிட்ட தகவல் தெரிவித்தது. ஏர் இந்தியா மற்றும் மலிவு கட்டண விமான நிறுவனமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ ஆகிய இரண்டும் ஒரே நிறுவனமாக பங்குகள் விற்பனை செய்யப்படும். இதற்கான நடைமுறைகள் 2018ஆம் ஆண்டில் முடிவடையும் என்று அமைச்சர் ஜெயந்த் சின்ஹா சொன்னார்.

அதே சமயத்தில் அதன் வட் டார தரைத்தள சேவைகள், பொறி யியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அமைப்புகள் தனி நிறுவனமாக பங்குகள் விற்கப்படும். இந்தியாவின் அடையாளமும் தேசிய விமான நிறுவனமுமான ஏர் இந்தியா, அதன் ஐந்து துணை நிறுவனங்கள், மற்றொரு கூட்டு நிறுவனம் ஆகியவை சுமார் 7.9 பில்லியன் டாலர் (சுமார் 52,000 கோடி ரூபாய்) கடனில் உள்ளது. இது, பிரதமர் மோடிக்கு பெரும் தலைவலியாக இருந்துவருகிறது. மேலும் மக்கள் செலுத்தும் வரி யில் அந்நிறுவனம் உயிர் பிழைத்து வருகிறது. ஏர் இந்தி யாவுக்கு செலவிடப் படும் தொகையை மக்களின் கல்விக்குப் பயன்படுத்தலாம் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு கூறி யிருந்தார். இந்நிலையில் விமான நிறு வனத்தை விற்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள மத்திய அரசின் 51 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய அமைச்சு அனுமதி அளித்தது.