You are here

நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒருவருக்கு நிறத் தெளிவின்மை

நீண்ட காலமாக நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு நிறத் தெளிவின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவால் ஏற்படக்கூடிய கண் பார்வை நோய் இல்லாத ஐந்தில் ஒரு நீரிழிவு நோயாளிக்கு நிறத் தெளிவின்மை ஏற்படுகிறது. பச்சை நிறத்தை நீல நிறமாகவும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களை இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தோடு மாறுபட்டு பார்க்க இயலாமலும் அவர்கள் இருப்பார்கள். அதனால் உட்புற வடிவமைப்பு, கட்டடக்கலை போன்ற துறைகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

இந்த விகிதத்தை ஒப்பிடுகை யில், பொதுவாக நிறத் தெளி வின்மை ஆண்களில் எட்டு விழுக்காட்டினரையும் பெண்க ளில் ஒன்றுக்கும் கீழான விழுக் காட்டினரையும் மட்டுமே பாதிக் கிறது. பல இனத்தைச் சேர்ந்த 849 நோயாளிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்தது. 21க்கும் 80 வயதுக்கும் அவர்கள் உட்பட்டிருந்தனர். அவர் கள் அனைவரும் இரண்டாம் வகை நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 2013ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் மற்றும் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல் லூரியால் இந்த ஆய்வு நடத்தப் பட்டது.