You are here

தங்க தமிழ்ச்செல்வன்: நாங்கள் வெளியிலிருந்தபடி தினகரனை ஆதரிப்போம்

புதுவை: தனிக்கட்சி துவங்குவது குறித்து தன் முடிவை இன்று அறிவிக்க இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இத னால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது. புதுக்கட்சி தொடங்கும் விஷ யத்தில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சற்றே அதிருப்தி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக தற்போது தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை தினகரன் உணர்ந்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னமும் கைநழுவிப் போய்விட்டது. எனி னும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றி அவரது தரப்பை சற்றே ஆறுதல்படுத்தி உள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை மனதிற்கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள் ளார் தினகரன். அவரது பெயரில் இயங்கும் பேரவையில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. தமக்கு ஏதும் தெரியாது என அவரது தீவிர ஆதரவாளர் களில் ஒருவரான தங்க தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார். “கட்சியின் பெயர், சின்னம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அவருக்கு வெளியிலி ருந்து ஆதரவு தருவோம். ஏனெனில் நாங்கள் எப்போதுமே அதிமுகதான்,” என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.