You are here

அமெரிக்க அரசு முடங்கியது

வா‌ஷிங்டன்: குறுகிய கால செலவு மசோதாவை நிறைவேற்றுவதற்கு செனட் சபை உறுப்பினர்கள் இணக்கம் காணாத நிலையில் நேற்று முதல் அமெரிக்க அரசாங் கம் செயலிழந்தது. அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்று நேற்றோடு ஓராண்டு ஆகி யது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று நண்பகல் 12 மணிக்குள் மசோதா நிறைவேற்றப்படவேண்டிய நிலை யில் செனட் சபை உறுப்பினர்கள் காலக்கெடு முடிவு பெறும் வரை விவாதித்தனர். அப்போது அமெரிக்காவில் நள்ளிரவு 12 மணி. அமெரிக்காவின் தேசிய அள விலான சேவைகளும் ராணுவ சேவைகளும் தொடர்ந்து செயல் படும்.

ஆனால், ஆயிரக்கணக் கான அரசாங்க ஊழியர்கள் ஊதி யம் பெறாமல் வேலை செய்யவேண் டிய நெருக்கடி நிலை நிலவும். விவாதம் இணக்கம் காணப்பட வில்லை என்றாலும் எழுந்த நெருக்கடிக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைக் குறை கூறி வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. குழந்தைகளாகக் குடியேறிய சட்டவிரோத குடியேறிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்பதைக் குறுகிய கால செலவு மசோதாவில் இணைக்கவேண்டும் என்று ஜனநாயகக் கட்சி உறுப்பி னர்கள் வலியுறுத்தியதால் மசோதா நிறைவேறவில்லை என்று பேச்சாளர் சாரா சேண்டர்ஸ் தெரி வித்துள்ளார்.