You are here

பண்பாட்டை விதைத்த கொண்டாட்டம்

அஷ்வினி செல்வராஜ்

நாள் தவறாமல் வாசல் தெளித்து கோலம் போடும் தாயாரின் செயலுக்கான கார ணத்தை அண்மையில் பொங்கல் கொண்டாட்டத்தின்போது அறிந்துகொண் டார் எட்டு வயது வைஷ்ணவி ராஜேஷ். இவரைப் போன்ற தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஏறக்குறைய 30 பேர் தமிழ்க் கலாசாரம் குறித்த சுவாரசியமான தகவல் களைப் பொங்கலுக்கு முதல்நாள் நடை பெற்ற ‘பொங்கல் கலாட்டா’ நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொண்டனர். தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை அமைப்பு புதிதாக இந்த ஆண்டு தொடங்கியுள்ள சமூக சேவைத் திட்டத் தின் ஒரு பகுதியாக கடந்த 13ஆம் தேதி ‘பொங்கல் கலாட்டா’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 25 மாணவர்கள் தாமான் ஜூரோங் வட்டாரத்தில் உள்ள ஆறு அடுக்குமாடி வீடுகளுக்குச் சென்று தாங்கள் ஏற்பாடு செய்த பொங்கல் கொண்டாட்டத்திற்குப் பிள்ளைகளை அனுப்பி வைக்கும்படி அழைப்பு விடுத்தனர். அதே வட்டாரத்தில் உள்ள ஃபெய் யீ குடும்ப சேவை அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்ப் பேரவையின் ‘பொங்கல் கலாட்டா’ நிகழ்ச்சியில் பிள்ளைகளுக்காக பல்லாங்குழி, லகோரி போன்ற விளையாட்டுகளும் மண்பானை களுக்கு வண்ணம் தீட்டுதல், வண்ணப் பொடிகளைக் கொண்டு அட்டைகளில் ரங்கோலி கோலமிடுதல் போன்ற அங்கங் களும் நடத்தப்பட்டன. “பல்வேறு திட்டங்கள் மூலம் சிங்கப் பூருக்கு சேவையாற்றி வரும் தமிழ்ப் பேரவை, தமிழ்ச் சமூகத்திற்கு உதவிக் கரம் நீட்டுவதற்காகவென்றே சமூக சேவை திட்டத்தைத் தொடங்கியது,” என்றார் தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவரான ரமேஷ் வெங்கட், 23. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘பொங்கல் கலாட்டா’ நிகழ்ச்சியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டுதல், வண்ணப் பொடிகளைக் கொண்டு ரங்கோலி கோலமிடுதல் (கீழ்ப்படம்) போன்ற அங்கங்கள் இடம்பெற்றன. படம்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை