You are here

ரோஹிங்யா மக்கள் நாடு திரும்புவது உறுதி; தயார்நிலையில் மியன்மார்

யங்கூன்: ராக்கைன் மாநிலத்திலி ருந்து வெளியேறிய ரோஹிங்யா முஸ்லிம்கள் மீண்டும் நாடு திரும் புவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக நேற்று அந் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது. தங்களின் தாய்நாட்டை விட்டு பங்ளாதே‌ஷில் தஞ்சம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை மியன்மார் கட்டம் கட்டமாக நாட்டிற்கு மீண்டும் அனுமதிக்க உள்ளது. அதன் தொடர்பில் முதல் கட்ட மக்களை அனுமதிக்க ஆயத்தநிலையில் இருப்பதாக மியன்மார் கூறியுள்ளது. அகதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் மியன்மாரின் திட்டம் குறித்து சந்தேகத்தில் இருந்த நிலையில் மியன்மாரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு திரும்பும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு நேற்று முன்தினம் சென்று பார்வை யிட்ட ராக்கைன் மாநில முதலமைச் சர் நியி பு, கட்டடங்கள், மருந்தகம், கழிவறை வசதிகள் அனைத்தும் செயல்படுத்தப்படும் நிலையில் தயாராகியுள்ளதை வலியுறுத்தியுள் ளார்.

ரோஹிங்யா மக்களின் பாதுகாப்பிற்கு மியன்மார் அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் வரை அவர்கள் நாடு திரும்ப தயக்கம் காட்டி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்