You are here

மூத்தோர் நிலையை கூறும் கண்காட்சி

வில்சன் சைலஸ்

பன்னாட்டு நிறுவனத்தின் வட் டார நிதி இயக்குநர், நிதித் துறை யில் முதுகலை படித்தவர், சிறந்த கோல்ஃப் விளையாட்டாளர் எனப் பல பரிமாணங்களில் திறனை வெளிப்படுத்திய திருவாட்டி கிம்முக்கு வயது வெறும் எண் மட்டுமே. வயதை மட்டும் வைத்து ஒரு வரின் வலிமையை எடைபோடக் கூடாது என்று கூறும் திரு வாட்டி கிம் சகாதேவா, 68, மூத்தோர் குறித்த தவறான அபிப்பிராயங்களைக் களைந்து அவர்களின் உண்மையான நிலையை எடுத்துக் கூற சிங்கப்பூர் அறிவியல் நிலையத் துடன் கைகோத்திருக்கிறார்.

அன்றாட வாழ்க்கையில் மூத்தோர் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சித்திரிக்கும் நடவடிக்கைகள் கொண்ட சிறப் புக் கண்காட்சி ஒன்றை சிங்கப்பூர் அறிவியல் நிலையம் கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி திறந்து வைத்தது. தளர்ந்த கைகள், வலுவிழந்த கால்கள் என மூத்தோரின் உடலில் வயது காரணமாக ஏற்படும் மாற்றங்களை விளக் கும் கண்காட்சியில் உதவிபுரி யும் 32 மூத்த வழிகாட்டிகளில் திருவாட்டி கிம்மும் ஒருவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற சுமார் 380 மூத்த குடிமக்கள் மூத்த வழிகாட்டி களாக கண்காட்சியில் சேவை செய்ய விரும்பி, சிங்கப்பூர் அறிவியல் நிலையத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பினர்.