You are here

தோ பாயோவில் பொங்கல் கொண்டாட்டம்

தோ பாயோ லோரோங் 7, புளோக் 1 முகவரியில் உள்ள சமூகக் கூடத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி ‘சூரியப் பொங்கல் 2018’ என்ற பெயரில் பொங்கல் திருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பீஷான் = தோபாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பீஷான் = தோ பாயோ அடித்தள அமைப்பின் ஆலோசகருமான திரு சக்தியாண்டி சுபாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண் டார்.

இக்கொண்டாட்டத்தில் அடித்- தள அமைப்புகளின் தலைவர் களு டன் பல இன மக்களும் ஒன்- றிணைந்து பொங்கல் திருநாளைக் கொண்டாடினர். பல இன கலாசாரத்தைப் பேணும் வகையில் கொண்டாடப் பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தோ பாயோ சவுத் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் கோலம் போடுதல், ஒன்றிணைந்த உடற்பயிற்சி, குழந் தைகளுக்கென பல்வேறு நடவடிக் கைகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. நிகழ்ச்சியில் பசுவும் கன்றும் கலந்துகொண்டன.

தோ பாயோ லோரோங் 7ல் நடந்த பொங்கல் கொண்டாட்ட விழாவில் கலந்துகொண்ட பீஷான் = தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சக்தியாண்டி சுபாட். படம்: தோ பாயோ இந்தியர் நற்பணிச் செயற்குழு