You are here

ரயில் பாதைகள் மேம்பாட்டுப் பணிகளுக்கு $573 மில்லியன்

  • ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

எம்ஆர்டியின் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் செய்யப்படவிருக்கும் மேம்பாட்டுப் பணிகளுக்காக $573 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. ரயில் பாதைகளின் மேம்பாட்டுப் பணிகளுக்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் அதில் மின் சார விநியோகத்தைப் புதுப் பிப்பதற்கும் இந்த நிதி வழங்கப்படும்.

மேம்பாட்டுப் பணிகளுக்கான இரண்டு ஒப்பந்தங்களையும் மின் சார விநியோகத்தைப் புதுப்பிக்கும் உரிமையையும் ஜப்பானிய தொழில் நுட்ப நிறுவனமான மைடன் சிங்கப்பூர் பெற்றுள்ளது. இரு ரயில் பாதைகளின் தண்டவாள சர்க்கியூட் கட்ட மைப்பை மாற்றும் $73 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் ஜெர் மனியின் சீமன்ஸ் நிறுவனமும் பிரான்ஸின் எஞ்சி சர்வீசஸ் சிங்கப்பூர் நிறுவனமும் இணைந்து அமைத்துள்ள கூட்டமைப்பிடம் சென்றுள்ளது.