You are here

சத்தத் தடுப்பு திட்டம்: முதற்கட்டப் பணிகள் 80 விழுக்காட்டுக்கு மேல் நிறைவு

எஸ்எம்ஆர்டி பாதைகளில் சத்தத் தைத் தடுக்கும் தடுப்பு அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டம் 80 விழுக் காட்டுக்கு மேல் நிறைவுபெற்றது. இத்திட்டத்தை இந்த ஆண் டுக்குள் முழுமையாக முடிக்க இலக்கு கொண்டுள்ளதாக என்று நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. லேக்சைட் நிலையத்துக்கும் பூன் லே நிலையத்துக்கும் இடைப் பட்ட பகுதி, அல்ஜுனிட் நிலையத் துக்கும் பாய லேபார் நிலை யத்துக்கும் இடைப்பட்ட பகுதி, பாய லேபார் நிலையத்துக்கும் யூனோஸ் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் இன்னமும் தடுப்பு அமைக்கப்பட வேண்டும்.

மற்ற இடங்களில் பயன் படுத்தப்பட்டுள்ள 2.5 மீட்டர் உயர தடுப்புகளுக்குப் பதிலாக 4.5 மீட்டர் உயரமுள்ள தடுப்புகள் இந்தப் பகுதிகளில் பயன் படுத்தப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது. இந்தப் பகுதிகளில் ரயில்கள் தடம் மாறும் பகுதிகள் என்பதால், இந்த உயரமான தடுப்புகள் சத்தத்தை வெகுவாகக் குறைக்க உதவும் என அது கூறியது.

செம்பவாங் எம்ஆர்டி நிலையத்தைவிட்டு புறப்படும் ரயில் எழுப்பும் சத்தத்தின் ஒலி அளவைக் காட்டும் கருவியைக் கொண்டு சரிபார்க்கும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்