You are here

உடன் செல்லும் சமையல்காரர்கள்

  • காஜல் அகர்வால்

முன்னணி நடிகையான காஜல் அகர்வால் மற்றும் தமன்னா ஆகிய இருவரும் எங்கு சென்றாலும் சமையல்காரருடன் செல் வதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்ச் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் சம்பளம் அதிக அளவில் வாங்குவதாகச் சொல்லப்பட்டாலும் உணவு விஷயத்தில் மிகவும் கறாராக இருந்து வருகின்றனர். திரைப்படங்களில் நாயகர்கள் வித்தியாசமான தோற்றங்களில் நடித்தால் கைதட்டும் ரசிகர்கள் கதையின் நாயகிகள் மட்டும் அழகாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றனர்.

திரைத் துறையில் நீடித்திருப்பதற்கு தங்களது உடலைக் கட்டுக்கோப்பாக, இளமையாக, அழகாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் நடிகைகளுக்கு உள்ளது. அதனால் தங்களுக்கு ஏற்ற உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுப்பதற்கு ஏதுவாக சமையல்காரரையும் படப்பிடிப்பு தளங்களுக்கு சமந்தா அழைத்துச் செல்லத் தொடங்கினார். அது நல்ல யோசனையாகத் தோன்றவே, காஜல் அகர்வாலும் தமன்னாவும் தங்களது சமையல்காரர்களைப் படப்பிடிப்புத் தளங்களுக்கு உடன் அழைத்துச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சீனு ராமசாமியின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். ‘கண்ணே கலைமானே’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் கிராமங்களிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சென்ற மாதம் தொடங்கிய அந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரை வாடிப்பட்டியை அடுத்துள்ள பெருமாள்பட்டி, கச்சபட்டி, குட்லாடம்பட்டி அருவி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.