You are here

இஸ்ரேலிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது சிரியா

ஜெருசலம்: இஸ்ரேலிய போர் விமானம் ஒன்று சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மீது குண்டுவீச்சு தாக்குதலில் ஈடு பட்டிருந்தபோது சிரியா விமானப் படை, அந்த இஸ்ரேலிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் கூறுகின்றன. சுட்டு வீழ்த்தப்பட்ட இஸ்ரேலின் எஃப்-16 ரக விமானம் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே விழுந்து நொறுங்கியது. சிரியாவில் நடக்கும் சண்டை யில் இஸ்ரேல் முதன் முறையாக அதன் விமானம் ஒன்றை இழந்திருப்பதாக நம்பப்படுகிறது.

சிரியாவில் உள்ள ராணுவத் தளத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானம் ஒன்று குண்டுகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து சிரியா விமானப் படை அந்த இஸ்ரேலிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சிரியாவின் ஊடகத் தகவல்கள் கூறின. இந்நிலையில் இஸ்ரேலிய விமானம் விழுந்து நொறுங்கியது பற்றிக் கூறிய இஸ்ரேல், புல் தரையில் விமானம் விழுந்து நொறுங்குவததற்கு முன்பு அந்த விமானத்தின் இரு விமானிகளும் வான்குடை மூலம் உயிர் தப்பியதாகக் கூறியுள்ளது.

சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட இஸ்ரேலிய போர் விமானம் இஸ்ரேலில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே விழுந்து நொறுங்கியது. வான்குடை மூலம் விமானிகள் உயிர் தப்பினர். படம்: ராய்ட்டர்ஸ்