You are here

சுரப்பிகளின் சீரான செயல்பாட்டுக்கு..

நமது மகிழ்ச்சியான மனநிலை, ஆரோக்கியத்தில், ‘சுரப்பிநீர்’ எனப்படும் ஹார்மோன்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. கவலை, கோபம், பயம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் நோய்ப் பாதிப்பில் இருந்து உடலைப் பாதுகாப்பதிலும் சுரப்பிநீரின் பங்கு இருக்கிறது. சுரப்புநீர் சுரப்பதில் பாதிப்பு ஏற்பட்டால் நோய்த் தாக்கங்களும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். எனவே, சீரான அளவில் சுரப்பிநீர் சுரப்பது அவசியமானது. சுரப்பிகளின் இயக்கம் சீராக இருந்தால்தான் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்பதால் அதைக் கருத்தில்கொண்டு நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். சில உணவு வகைகள் சுரப்பிகள் சீராகச் செயல்பட உதவுகின்றன.

ஆப்பிள் பழம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியின் சீரான இயக்கத்துக்குத் துணைபுரியும். பெண்களுக்கு அதிகமாகச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கக் கூடியது ஆப்பிள். பாதாம் பருப்பில் நார்ச்சத்து, புரதம் ஆகியவற்றுடன், இதயத் துக்கு நலம் சேர்க்கும் ஊட்டச் சத்துக்களும் உள்ளன. தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை நீரில் அல்லது பாலில் ஊறவைத்துச் சாப்பிடலாம். அது மாவுச்சத்து, சுரப்புநீர், சர்க்கரை யின் அளவைச் சீர்படுத்தும்.