You are here

பெண்களைக் கொண்டாடும் இளையர்களின் இசைநிகழ்ச்சி

சுதாஸகி ராமன்

பெண்களுக்கு சமூகம் நன்றி கூறுவதன் முக்கியத்துவம், அவர்கள் அன்றாடம் எதிர்நோக் கும் சவால்கள், அவர்களின் சாதனை என்று பெண்களைக் கொண்டாடும் இசை நிகழ்ச்சியை விரைவில் இசைப்பிரியர்கள் ரசிக்கலாம். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் இந்திய இசைக் குழு படைக்கும் இசை நிகழ்ச்சி, அதில் இடம்பெறவுள்ள பாடல்களின் மூலம் பெண்கள் வாழ்வின் பல பரிமாணங்களை எடுத்துரைக்கவுள்ளது. ‘ஐ அம்’ என்ற தலைப்பில் எஸ்பிளனேட் கலை அரங்கில் நாளை இரவு 7.30 மணிக்கு அரங்கேறவுள்ள இந்த நிகழ்ச்சி யில் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டக் கல்வி மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் ஒன்று சேர்ந்து இசைமழை பொழிய உள்ளனர். பாரம்பரிய கர்நாடக இசை, இந்துஸ்தானி இசையின் மூலம் ஆண்களுக்கு நிகராக பெண் களும் உள்ளனர் என்பதையும் பெண்களில்லாமல் சமூகம் உயர்வு அடையாது எனும் முக்கிய கருத்துகளை இசைக் குழு முன்வைக்கவுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இசைக்குழுவினர். படம்: தேசியப் பல்கலைக்கழகத்தின் இந்திய இசைக்குழு