You are here

ஒவ்வொரு போட்டியிலும் சாதிக்க இலக்கு

முஹம்மது ஃபைரோஸ்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு பயிற்சி மேற் கொண்டிருந்தபோது தோள்பட்டை யில் ஏற்பட்ட மோசமான காயத்தால் 24 வயது முஹம்மது ஹனுர்டீன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு குத்துச்சண்டைப் போட்டியில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வேண்டியிருந்தது. இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக நிகழ்ந்தது.

“தோள்பட்டையில் தசைநாண் கிழிந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் எளிய உடற் பயிற்சிகூட செய்ய முடியாமல் போனது. பெரும் அச்சுறுத்தலாக அமைந்த அந்தச் சூழலில் மனதளவில் நான் சோர்ந்து போனேன்,” என்ற இவர், மீண்டும் குத்துச்சண்டையில் ஈடுபட முடியுமா என்ற கேள்வி எழுந்ததை நினைவுகூர்ந்தார். என்றாலும், குத்துச்சண்டையில் சாதிப்பது கனவாகவே போய்விடக் கூடாது என்ற வைராக்கியத்தில் வலி நிவாரண மருந்துகளை உட் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதத் தில் தென்கிழக்காசிய விளை யாட்டுகளில் பங்கேற்றார் ஹனுர்டீன்.

கோலாலம்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற 52 கிலோகிராம் எடைப் பிரிவுக்கான குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் மியன்மாரைச் சேர்ந்த லின் டுட் பயிங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய முஹம்மது ஹனுர்டீன் (வலது). படம்: முஹம்மது ஹனுர்டீனின் ஃபேஸ்புக் பக்கம்