You are here

‘கலகலப்பாக நடிக்க ஆசை’ - பார்வதி நாயர்

  • பார்வதி நாயர்.

தென்னிந்திய திரையுலகம் ஆரோக்கியமான போக்கில் நகர்கிறது என்றும், அதே சமயம் கதாநாயகர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் கூறுகிறார் பார்வதி நாயர். கதாநாயகி வேடத்தில் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லும் நடிகைகளுக்கு மத்தியில், வித்தியாசமான, சர்ச்சைக்குரிய, எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இவருக்கு திரை விமர்சகர்களின் பாராட்டுகள் குவிகின்றன. அண்மையில் வெளியான ‘நிமிர்’ படத்தின் வெற்றியால் பூரிப்பில் உள்ளார் அம்மணி.

குறிப்பிட்ட வேடங்களில் நடிக்கவேண்டும், இப்படிப்பட்ட படங்கள்தான் வேண்டும் என்றெல் லாம் எதையும் திட்டமிடுவதில்லை என்று குறிப் பிடுபவர், தானாகத் தேடி வரும் வாய்ப்புகள் நல்ல வேடங்களாக இருந்தால் தயக்கமின்றி உடனே ஒப்புக் கொள்வதாகக் கூறுகிறார். “உண்மையில் சொல்லப் போனால் நான் நவ நாகரிகப் பெண். அனைவரிடமும் சகஜமாக சிரித்துப் பேசிப் பழகுவேன். ஆனால் இதுவரை கிராமத்துப் பெண், வில்லத்தனம் செய்யும் வேடங்களிலேயே வந்திருக்கிறேன்.

“எனது உண்மையான சுபாவம் கொண்ட நாகரிகமான, கலகலப்பாகப் பேசும் பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் உள்ளது,” என்கிறார் பார்வதி நாயர்.