You are here

சிறந்த இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு

வில்சன் சைலஸ்

‘பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காஸ்மிக் கதிர் வீச்சு சிங் கப்பூரையும் தாக்கவிருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு கைபேசி களை அணைத்து வைப்பது நல்லது’ என்ற செய்தி 24 வயது கிஷனைப் பெரிய அளவில் பாதித்தது. சமூக ஊடகங்களில் வெளி யான அந்தச் செய்தியை அவசர மாக மற்றவர்களுக்கும் பகிர்ந்த துடன் கதிர்வீச்சு பாதிப்பைத் தவிர்க்க மும்முரமாகத் தயாரான கிஷனுக்கு அது பொய்யான தகவல் என்பது பின்னர் தெரிய வந்தது.

தம்மைப்போல அடுத்தவர் களும் பொய்யான தகவல்களால் ஏமாறக்கூடாது என்பதற்காக அண்மையில் தொடங்கிய ‘சிறந்த இணைய இயக்கத்’தில் இணைந்து பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விழைகிறார் ஜே. ஜெய்கிஷன். கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துலக அளவில் ‘பாது காப்பான இணைய நாள்’ கொண்டாடப்பட்டது. அன்று சிங்கப்பூரில் தொடங்கிய ‘சிறந்த இணைய இயக்கம்’, பொறுப்பான, பாதுகாப்பான முறையில் இணையத் தளங்களைப் பயன்படுத்துதல் குறித்த விளக்கம் அளிக்கும் நோக்கத்துடன் நடை பெறுகிறது.